OOSAI RADIO

Post

Share this post

பறக்கவிடப்பட்டது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது. நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், வரும் 22ஆம் திகதி, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது.

த.வெ.கழகத்தின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது.

Leave a comment

Type and hit enter