சிறுமி மீது மோதிய கார் – பொலிஸார் விசாரணை! (Video)
இந்தியாவின் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் சைக்கிளை செலுத்தி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் காரில் மோதி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தை சேர்ந்த திஷா படேல் என்ற 4 வயதுடைய சிறுமி ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி, மெஹ்சானாவிலுள்ள ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிளை செலுத்தி விளையாடிக்கொண்டிருந்த போது எதிரில் வந்த காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி எழுவதற்குள் எதிரே வந்த கார் அவர் மீது ஏறியுள்ளதுடன் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தினால் சிறுமியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.