விஜயகாந் வீட்டுக்குச் சென்ற நடிகர் விஜய்!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டுக்கு நடிகர் விஜய் சென்று, பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தார்.
அப்போது, ‘THE GOAT’ படத்தில் விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்த அனுமதி கொடுத்ததற்காக, பிரேமலதா விஜயகாந்துக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பின்போது, ‘THE GOAT’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் உடனிருந்தனர்.