OOSAI RADIO

Post

Share this post

ரணிலின் தேர்தல் சின்னத்தின் பின்னணி!

கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை காரணமாக தான் சிலிண்டரை சின்னமாக தெரிவு செய்தேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Ask Ranil நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்துள்ளீர்கள் ‘யானை’ இல்லாமல் ‘சிலிண்டர்’ தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன்.

கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசியல் ரீதியாக புதிதாக சிந்திக்க வேண்டும்.

பல குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன்.

சுயேட்சை வேட்பாளர் எந்த சின்னத்தையும் தேர்வு செய்யலாம். இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானதாகும். அதனால் தான் சிலிண்டரைத் தெரிவு செய்தேன் இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter