OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் மதகுரு அடையாள அட்டை ஆகியவை இருக்க வேண்டும்.

அடையாள அட்டை இல்லை என்றால், உங்களிடம் தற்காலிக அடையாள அட்டை இருக்க வேண்டும். இல்லையெனில், தேர்தல் அலுவலகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டையைப் பெற வேண்டும்.

செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லை என்றால், உடனடியாக ஏதேனும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 13,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter