OOSAI RADIO

Post

Share this post

பிரியாணி உட்கொண்ட 3 மாணவர்கள் பலி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பழுதடைந்த பிரியாணியை உட்கொண்ட 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு வழங்கப்பட்ட சமோசா மற்றும் பிரியாணியை உட்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் குறித்த 30 மாணவர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 3 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததால், பலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter