தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம்!
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதோடு கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாத நிலையில் நாளை (22.08.2024) தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாக கட்சியின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் ”தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.