OOSAI RADIO

Post

Share this post

இரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!

தமிழில் தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் வெளியானது. அதே ஆண்டு அவர் ஹீரோயினாக அறிமுகமான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ரிலீஸ் ஆனது. கெளதம் மேனன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ். இப்படம் படுதோல்வி அடைந்தாலும் அதன் பாடல்கள் வேறலெவலில் ஹிட் ஆகின.

பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்தார் மேகா. அதேபோல் அதர்வா ஜோடியாக பூமரேங், காளிதாஸ் ஜெயராம் உடன் ஒரு பக்க கதை என மேகா ஆகாஷ் நடிப்பில் தமிழில் வெளிவந்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியதால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார் மேகா ஆகாஷ். அங்கு அவர் நடிப்பில் டியர் மேகா, ராஜ ராஜ சோரா, பிரேமதேசா, ராவனசுரா போன்ற திரைப்படங்கள் வெளியாகின.

கடைசியாக மேகா ஆகாஷ் நடிப்பில் வெளிவந்த சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்கள் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. இருப்பினும் அவர் கைவசம் ஒரு தமிழ் படம் கூட இல்லாததால், திருமணத்துக்கு தயாராகிவிட்டார் மேகா ஆகாஷ். அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை கரம்பிடிக்க உள்ளார். அவர்களின் திருமணத்துக்கு குடும்பத்தினரும் ஓகே சொன்னதால் இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஆகஸ்ட் 22-ந் தேதி மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை மேகா ஆகாஷ் திடீரென பதிவிட்டதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Type and hit enter