OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வாய்ப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அரச இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இலவச ஒளிபரப்பு நேரம் வழங்கப்படவுள்ளது.

வேட்பாளர்களுக்கு நேர ஒதுக்கீடு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று (22 ஆம் திகதி) தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, ஒரு வேட்பாளர் தேசிய வானொலி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் தலா 15 நிமிடங்களுக்கு மூன்று வாய்ப்புகளைப் பெறுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 39 வேட்பாளர்கள் சார்பில் 39 பிரதிநிதிகள் அரச இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பிரசாரங்களில் ஈடுபடவுள்ளார்கள்.

Leave a comment

Type and hit enter