குறைக்கப்படும் கட்டணங்கள் – மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
நீர் கட்டண திருத்தம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீர் கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையினால் (Sri Lanka Electricity Board) மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய நீர்க் கட்டணச் சூத்திரத்தின் பிரகாரம் இரசாய திரவங்கள் உட்பட ஏனைய செலவினங்களைக் கருத்தில் கொண்டு நீர்க் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சமுர்த்தி பெறுபவர்கள் மற்றும் வீட்டு பாவனையாளர்களுக்கு 7 சதவீதமாகவும், அரச வைத்தியசாலைகளுக்கு 4.5 சதவீதமாகவும் நீர் கட்டணம் திருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு 6.3 சதவீதமாக நீர் கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.