2வது திருமணம் செய்துள்ள நடிகை!
மறந்துடியா என கொஞ்சம் தமிழில் பேசி மதராசப்பட்டினம் என்ற தனது முதல் படத்தின் மூலம் மக்களை கவர்ந்தவர் தான் நடிகை எமி ஜாக்சன்.
முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அடுத்தடுத்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன், 2.0, மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
நடிகை எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜுடனை காதலித்து நிச்சயம் செய்தார். ஆனால் இவர்களுக்கு திருமணம் ஆகாமலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தார்கள்.
எமி ஜாக்சன் தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தான் எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்.
சமீபத்தில் இருவரின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் கோலாகலமாக நடந்துள்ளது.
வெளிநாட்டில் நடந்த எமி ஜாக்சனின் திருமணத்தில் தமிழ் சினிமா இயக்குனர் ஏ.எல்.விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.