OOSAI RADIO

Post

Share this post

பிரம்மாண்டமாக ஒளிரும் பொருள் கண்டுபிடிப்பு!

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை பிரபஞ்சத்தில் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண் மீன் திரள்கள் சூழ்ந்த இவ்வகையாக ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

மத்தியில் உள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்டுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் அண்டும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது.

இதுவே அதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளது. இதுவரை கண்டறியப்படாத பிரகாசமான குவாசர் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த குறிப்பிட்ட குவாசர் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குவாசர் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும் எனவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment

Type and hit enter