OOSAI RADIO

Post

Share this post

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு!

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் திகதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாகவும், விஜய்யின் உத்தரவின் பேரில் மாநாட்டுக்கு அனுமதி கோரி த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.

மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில்,மாநாட்டின் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளன.

மேலும், இந்த மாநாட்டில் சுமார் பத்து இலட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய முதல் மாநாட்டையே மிகப் பிரமாண்டமாக விஜய் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter