பெண் சட்டத்தரணிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நபர்!
கம்பஹா நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவருக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பிய நபர் ஒருவரை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் திலினி கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பெண் சட்டத்தரணியினால் கணனி குற்றப்பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து, கம்பஹாவைச் சேர்ந்த எப். குமார் என்ற சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாலியல் செயல்களில் ஈடுபடும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சட்டத்தரணிக்கு WhatsApp ஊடாக அனுப்பியதாக முறைப்பாட்டாளர் பெண் சட்டத்தரணி முறைப்பாடு செய்துள்ளர்.
அதேவேளை ஆபாச காணஒளி, புகைப்படங்கள் அனுப்பியவருக்கு , குறித்த பெண் சட்டத்தரணி கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுட்டள்ளது.