சுவிட்சர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள தடை
ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்காக பாரீஸ் சென்ற சுவிஸ் குடிமக்கள், அடுத்த சில வாரங்களுக்கு இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் சிக்கன்குன்யா முதலான வைரஸ்கள் பரவிவருவதாக சுவிட்சர்லாந்தின் Vaud மாகாண, இரத்த வங்கி மையத் தலைவரான Nathalie Rufer என்பவர் தெரிவித்துள்ளார்.
Tiger mosquito என்னும் கொசு மூலம் இந்த வைரஸ்கள் பரவும் நிலையில், இந்த வைரஸ்கள் ஒலிம்பிக் போட்டிகளைக் காணச் சென்றவர்கள் உடலில் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆகவே, அவர்கள் இரத்ததானம் செய்வதால், இரத்த தானம் பெறுவோருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, பாரீஸ் சென்று திரும்பியவர்கள், குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்காவது இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.