OOSAI RADIO

Post

Share this post

சூரியன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!

கிரகங்களின் தந்தையான சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மரியாதைக்கு காரணியாக கருதப்படுகிறார். இந்த கிராகமானது ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும். சூரியன் அனைத்து நட்சத்திரங்களையும் கடந்து ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். அந்த வகையில் தற்போது சூரியன் பூரம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

செப்டம்பர் 13 அன்று காலை 9:44 மணிக்கு உத்திரம் நட்சத்திரத்திற்குச் சென்று செப்டம்பர் 27 வரை அங்கேயே இருப்பார். 27 நட்சத்திரங்களில் உத்திரம் நட்சத்திரம் 12வது இடத்தில் உள்ளது.

இந்த காலகட்டத்தில், சூரியன் தனது ராசியான சிம்ம ராசியில் இருப்பார், இதன் காரணமாக அதன் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இது மூன்று ராசிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த 3 ராசிக்கு பலன் கிடைக்கும் என நாம் இங்கு பார்போம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர மாற்றம் மகிழ்ச்சியைத் தரும். இந்த ராசிக்காரர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால் பெரிய லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம். பத்திரங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களும் லாபம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் உறவு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

சூரியனின் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். இந்த ராசிக்கு அதிபதியான சூரியன் இரண்டாம் வீட்டில் அமர்வதால் பண பலம் கிடைக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கலாம், ஆனால் நீண்ட கால முயற்சிகள் பலன் தரும். புதிய வருமான ஆதாரம் உருவாகலாம், தொழில் வாழ்க்கையில் பதவி உயர்வு கிடைக்கும், இலக்குகளை அடையலாம், வியாபாரம் விரிவடையும். வாழ்க்கை துணையுடன் நல்லுறவு இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

துலாம்

சூரியனின் நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம், பண பலம் கிடைக்கலாம், வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும், அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள், பயணம் செய்ய திட்டமிடலாம். சூரியபகவானின் அருளால், இலக்குகள் நிறைவேறும் இதனால் நம்பிக்கையை அதிகரிக்க முடியும்.

Leave a comment

Type and hit enter