OOSAI RADIO

Post

Share this post

செவ்வாய் கிழமை முருக வழிபாடு செய்வது எப்படி?

செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும். அதற்கான காரணங்களும், அதன் பலன்களும் என்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப் பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கவும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும்.

ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.

முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிற நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தங்கு தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.

அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல் வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இரு புறமும் இரு விளக்குகளில் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று திரிகள் என ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் நம் வாழ்வில் சீரும், சிறப்புகள் வந்து சேரும்.

நட்சத்திரங்களில் கார்த்திகை, விசாகம் முருகனுக்கு சிறப்பானது போல், சஷ்டி திதி மிகவும் சிறப்பானது. சஷ்டியில் விரதம் இருக்க அகப்பையில் குழந்தை வரும் என்பது முன்னோர்களின் அருள் வாக்கு. முருகனை நினைத்து சஷ்டியில் விரதம் இருப்பது நல்லது. அதுவும் செவ்வாய் கிழமையில் அமைந்தால் அதற்கு மாபெரும் சக்தி உண்டு.

Leave a comment

Type and hit enter