மகளின் தலையில் CCTV – கண்காணிக்கும் தந்தை – வியக்க வைக்கும் காரணம்!
சிசிடிவியை இப்படியும் பயன்படுத்த முடியுமா என நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு, பாகிஸ்தானில் பெண் குழந்தையின் தந்தையான ஒருவர், தனது மகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது தலையில், சிசிடிவி கேமராவுடன் உலா வந்து பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளார்.
நவீன தொழில்நுட்பம் காரணமாக மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமரா பல வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உறுதுணையாக உள்ளது. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவி கேமரா முக்கிய பங்கு வகுகிறது.
ஆனால், சிசிடிவியை இப்படியும் பயன்படுத்த முடியுமா என நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு, பாகிஸ்தானில் பெண் குழந்தையின் தந்தையான ஒருவர், தனது மகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தியுள்ளார்.
தனது மகளுக்கு எந்த விதத்திலும் ஆபத்து நெருங்கி விட கூடாது என்பதாற்காகவே இந்த செயலில் அவர் இறங்கியுள்ளதாக அந்த பெண்ணே கூறியுள்ளார். தனது தந்தை எது செய்தாலும் அதை முழு மனதுடன் ஏற்பேன் என்று, அந்த பெண் சொல்பேச்சு கேட்கும் கிளிப்பிள்ளையாக கூறியுள்ளார்.
உலகமே கையடக்கத்திற்குள் வந்த பிண் எங்கும் சிசிடிவி, எதிலும் சிசிடிவி என மாறிய நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் பெண்ணின் தலையில் சிசிடிவை மாட்டி விட்டது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.