OOSAI RADIO

Post

Share this post

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து – திரிஷா செய்த வேலை!

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இது பரபரப்பை கிளப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இது இந்த ஆதாரத்தை மேலும் பூதாகரமாக வெடிக்க செய்திருக்கிறது. ஜெயம் ரவி தன்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து முறையான நடவடிக்கை எடுப்பேன் எனவும் எங்கள் வாழ்க்கையில் கடினமான இந்த பகுதியை கடந்து கொண்டிருக்கும் பொழுது எங்களுடைய தனியுரிமையை மதிக்க வேண்டுமாக மீடியாக்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போகிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இதனை பலரும் வதந்தி என யூகித்தனர்.

ஆனால் கெடுவைப்பாக இந்த விஷயம் உண்மையாக நடந்திருக்கிறது என்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இப்படி ஜெயம் ரவியின் திருமண வாழ்க்கையில் புயல் வீசிக்கொண்டிருக்க நடிகை திரிஷா பேசியுள்ள பேச்சு ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து இருக்கிறது.

அதே சமயம் நடிகை திரிஷாவிற்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அப்படி என்ன கூறினார் நடிகை திரிஷா…? என்பதை இங்கே பார்க்கலாம்.

42 வயதை கடந்திருக்கும் நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இடையில் பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணத்திற்குள் இருவருக்கும் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக திருமணத்தை ரத்து செய்தார் நடிகை திரிஷா.

அதன்பிறகு திருமணம் என்ற பேச்சை எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் அவர் என்னை சுற்றி ஆயிரக்கணக்கான திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்தவரை அவர்கள் அனைவரும் தவறான காரணங்களுக்காகவே ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் எல்லா தம்பதியினரையும் குறை சொல்வதாக அர்த்தம் இல்லை.

எனக்கானவரை சந்திக்கும் முயற்சியில் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கானவரை நான் சந்தித்த பிறகு நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். அதே சமயம் கடைசி வரை எனக்கு கல்யாணமே நடக்கவில்லை என்றாலும் நான் கவலைப்பட மாட்டேன்.

கல்யாணத்தை ஏதோ விபரீதமான செயல் என்று நான் சொல்லவில்லை. எனக்கு இருக்கும் இந்த எண்ணம் இயல்பானது என நான் கருதுகிறேன். திருமண வாழ்வில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டு கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்கின்றனர்.

அவர்கள் வாழ்க்கையில் நிம்மதி என்ற விஷயமே இல்லை மகிழ்ச்சியாகவும் அவர்கள் இருப்பதில்லை. அவர்களை சுற்றி இருப்பவர்களும் சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள் என நடிகை திரிஷா பேசியிருக்கிறார்.

திரிஷா பேச்சை கேட்ட இந்த ரசிகர்கள் ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சையை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் பொழுது இப்படி கருத்து தேவையா..? என்று நடிகை திரிஷாவை விளாசி வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter