Share this post

‘ஜெயிலர்’ பட முதல் பார்வை போஸ்டர்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் பட முதல் பார்வையை வெளியிட்டு படப்பிடிப்பு நேற்று முதல் (ஆகஸ்ட் 22) துவங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கண்ணாடி அணிந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் எதுவும் முறையாக அறிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. மேலும் தரமணி, ராக்கி படங்களில் மிரட்டிய வசந்த் ரவி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.

Recent Posts

Leave a comment