அநுர தரப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்காது!
ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தரப்பு ஆட்சியை ஏற்றுக் கொண்டால் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை இல்லாது ஒழிக்கப்படும் என சூழலியலாளர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய கொடியை மாற்றுவதற்கும் அனுர தரப்பினர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது காணப்படும் தேசிய கொடியை மாற்றி பொருத்தமான வேறு கொடியை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனுர தரப்பினர் வேறு எந்த ஒரு தலைவரும் செய்யாத வகையில் பௌத்தப்பிக்குகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி பசுத்தோல் போர்த்திய புலிகளைப் போன்று செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.