OOSAI RADIO

Post

Share this post

காதலியின் ஆபாச புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய காதலன்!

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரிய காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சந்தேக நபரான காதலனுடன் பல மாத காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந் நிலையில் சந்தேக நபர் இந்த மாணவியுடனான காதல் உறவை திடீரென முறித்து கொண்டுள்ளார்.

சந்தேக நபரான காதலன் மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி மாணவியை அச்சுறுத்தி 34,500 ரூபா பணத்தை பெற்றுள்ளார். அதோடு தனக்கு மேலும் 30,000 ரூபா பணம் தேவைப்படுவதாக இந்த மாணவியிடம் கூறியுள்ளார்.

பின்னர், இந்த மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதோடு மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனை அடுத்து, சந்தேக நபரான காதலன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter