OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் பாடகி

அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift), அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் கமலா ஹரிஸின் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலா ஹரிஸ் அமெரிக்கர்களின் உரிமைகளுக்காக போராடுவதால் நான் அவருக்கு வாக்களிக்க போவதாக ஸ்விப்ட் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் டெய்லர் ஸ்விப்ட் 284 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

கமலா ஹரிஸ் தொடர்பான அவரது பதிவு 10 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களை பெற்றதுடன் அவர் பதிவிட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கத்தின் ‘vote.gov’ இணையதளம் 405,999 பார்வையாளர்களை உள்ளீர்த்துள்ளது.

எனினும், ஒரு பிரபலத்தின் ஆதரவு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கேள்வியும் உள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் தயாரிப்பாளரான ஓப்ரா வின்ஃப்ரேயின் (Oprah Winfrey) ஆதரவு 2009ஆம் ஆண்டு தேர்தலில் பரக் ஒபாமாவிற்கு மில்லியன் கணக்கான வாக்குகளை சேர்த்ததாக அமெரிக்காவின் நோர்த்வெஸ்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

அத்துடன், 2010ஆம் ஆண்டளவில் அமெரிக்க நடிகர்களான ஜோர்ஜ் க்ளூனி (George Clooney) மற்றும் அஞ்செலினா ஜூலி (Angelina Jolie) ஆகியோரின் கருத்துக்கள் அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறு பிரபலங்கள், இளைஞர்களின் அரசியல் பார்வையில் அதிகளவு செல்வாக்கை செலுத்த முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இவ்வாறிருக்க, அமெரிக்காவின் 36 மாநிலங்களில் 18-29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைவடைந்துள்ளதாக டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் இளைஞர் சிவில் ஈடுபாடு குழுவின் ஆய்வு அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter