OOSAI RADIO

Post

Share this post

Cake இல் கிடந்த மனித பல்!

அமெரிக்காவை தளமாக கொண்டு சீனாவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனை செய்யப்பட்ட மூன் கேக் ஒன்றில் மனித பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு, சாங்சூவில் உள்ள சாம்ஸ் கிளப் (Sam’s Club) என்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல்பொருள் அங்காடியில், அமைந்துள்ள ஒரு கடையில் வாங்கப்பட்ட மூன் கேக்கிலேயே(mooncake) மனித பல் கண்டறியப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் தனது சமூக ஊடக தளத்தில் குறித்த பல்பொருள் அங்காடியில் வாங்கிய 30 யுவான் (அமெரிக்க டொலர் 4) மீட் ஃபில்ட் மூன் கேக்கில் (meat-filled mooncake) பல் ஒன்றை காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த பல் தனது குடும்ப உறுப்பினர்களில் யாருடையதும் இல்லை என்றும், இந்த சம்பவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நிறுவனம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இருவராலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சாங்க்ஸோவில் உள்ள சாம்ஸ் கிளப் பல்பொருள் அங்காடி இந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளதுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter