OOSAI RADIO

Post

Share this post

Iphone 16+ வௌியான அதிர்ச்சி தகவல்!

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது முற்றிலும் புதிய ஐ போன் 16 சீரிஸ் மொடல்களை அறிமுகம் செய்தது. அந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மொடலை பெற்றுக் கொள்வதற்கு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொடலை பெற்றுக் கொள்வதற்கு முன்பதிவுகள் குறைவாகவே இருந்துள்ளன.

ஆப்பிள் நிறுவனம் ப்ரோ சீரிஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் என்ற கணிப்பில் அதிவேக டெலிவரி மற்றும் அதிக யூனிட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஐ போன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மொடல்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதிக யூனிட்கள் முன்பதிவாகி உள்ளன.

முன்பதிவு ஆரம்பித்த முதல் ஒருவார காலத்தில் ஐபோன் 16 வாங்க 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 48% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 16% யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.7% குறைவு ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter