Post

Share this post

காதலருடன் சாகச விடியோவைப் பகிர்ந்த நடிகை!

காதலருடன் சாகச விடியோவை நடிகை பிரியா பவானி ஷங்கர் பகர்ந்துள்ளார்.
பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
பிரியா பவானி ஷங்கர் 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்துவருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது காதலருடன் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு சென்றுள்ள பிரியா சாகச விடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் மலைப்பகுதியில் ஹெலிஹாப்டரில் இருந்து பயிற்சியாளருடன் பாராசூட் மூலம் கீழே குதக்கிறார்.
அவரது பதிவில், கடவுள் சிறப்பான விஷயங்களை பயத்தின் மறுப்பக்கத்தில் வைத்திருப்பார் என்ற வில் ஸ்மித்தின் வாசகத்தை பகிர்ந்துள்ளார்.
ஜெயம் ரவியுடன் ‘அகிலன்’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’ படங்களில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர், ‘இந்தியன் 2’, ‘பத்து தல’, ‘ருத்ரன்’ போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

Leave a comment