OOSAI RADIO

Post

Share this post

சுக்கிர பகவான் பெயர்ச்சி – அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

இன்று தொடங்கவிருக்கும் பித்ரு பக்ஷத்தில் புதன் மட்டுமல்ல சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 18ம் திகதி சுக்கிரன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனின் தாக்கம் அனைவரின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தும். சிலருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருக்கும் இந்த சுக்கிரப் பெயர்ச்சிக்கு பிறகு துலாம் ராசியில் சுக்கிரன் இருக்கும்.

ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பவர்களைத் தவிர, 4 ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும் என்று சொல்லும்போது, அது வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரனின் நிலையை மட்டுமே வைத்து சொல்லும் ராசிபலன் கணிப்பு ஆகும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும் சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சியால் குதூகலம் அடையப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா என்பது பற்றி நாம் இங்கு பார்போம்.

ரிஷப ராசி

சுக்கிரப் பெயர்ச்சியால் ரிஷப ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டம் இதுதான் என்று சொல்லும்படி பல நல்ல விஷயங்கள் நடக்கும். குறிப்பாக, சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக முடியும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

கன்னி ராசி

ரிஷப ராசியினரைப் போலவே கன்னி ராசியினருக்கும் சுக்கிரப் பெயர்ச்சி நல்ல பலன்களையே செய்யும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும், சொத்துப் பிரச்சனைகள் சாதகமாக மாறும், பொன் வாங்கும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் ராசி

சுக்கிரனின் ராசிப் பெயர்ச்சியால் பலனடையும் ராசிகளில் விருச்சிகம் ராசியும் அடங்கும். தடைபட்ட வேலைகள் சுலபமாக முடிவது, பொன் பொருள் சேர்க்கை, சொத்து வாங்குவது என நல்ல விஷயங்கள் நடைபெறும்.

மீன ராசி

துலாமில் சுக்கிரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். துலாமில் சுக்கிரனின் சஞ்சாரம், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பண வரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். நண்பர்களுடனான உறவு நல்லபடியாக இருக்கும். குழந்தைகள் வகையில் அருமையான செய்திகள் வந்து சேரும்.

Leave a comment

Type and hit enter