கை, கால்களை கட்டிப்போட்டு 28 மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!
தனியார் விடுதியில் தங்கியிருந்த 28 மாணவிகளை கை, கால்களை கட்டிப்போட்டு தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விடுதி நிர்வாகி, அவருக்கு உடந்தையாக இருந்த 2வது மனைவி மற்றும் மருமகளை போலீசார் தேடிவருகின்றனர். ஆந்திர மாநிலம் ஏலூரில் மாணவிகள் தங்கும் தனியார் விடுதி உள்ளது.
யர்ரகுண்டப்பள்ளியை சேர்ந்த சசிகுமார் (52) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். இவரது 2வது மனைவி பனி.இவர் விடுதி வார்டனாகவும், மருமகள் பாதுகாவலராகவும் உள்ளனர்.
இந்த விடுதியில் ஏலூர் மாவட்டத்தை சேர்ந்த 3ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 45 மாணவிகள் தங்கியுள்ளனர்.
சசிகுமார் போட்டோ ஸ்டுடியோவும் வைத்துள்ளார். அவ்வப்போது இரவில் விடுதிக்கு வரும் சசிகுமார், மாணவிகள் தங்கியுள்ள அறைகள் அருகே நின்றுகொண்டு புகை பிடித்தபடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவாராம்.
இதை மாணவிகள் வெளியே சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளனர். கடந்த 15ம்திகதி அங்குள்ள 3 சிறுமிகளிடம் பேசிய சசிகுமார், `உங்களை அழகாக போட்டோ எடுக்கிறேன், என்னுடன் வாருங்கள்’ என வற்புறுத்தி காரில் அழைத்து சென்றுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு சிறுமிகளின் கை, கால்களை கட்டி விடியவிடிய பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அந்த சிறுமிகளை விடுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடந்த 2 நாட்களாக கடும் மன உளைச்சலுடன் இருந்த நிலையில் நேற்றிரவு ஏலூர் போலீசில் புகார் கொடுத்தனர். ஏலூர் டிஎஸ்பி ஷ்ரவன்குமார் மற்றும் பொலிசார், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.
அனைவரையும் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரை காரில் அழைத்து சென்று கை, கால்களை கட்டி சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
ஆனால் அவரது மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்து சசிகுமாரை தேடிவருகின்றனர்.
இதுதொடர்பாக நிருபர்களுக்கு டிஎஸ்பி அளித்த பேட்டி: கடந்த 4 மாதங்களில் மொத்தம் 28 மாணவிகளை காரில் அழைத்து சென்று கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அறை பூட்டப்பட்டுள்ளது.
அதனை திறந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம். தப்பிய சசிகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது 2வது மனைவி மற்றும் மருமகள் ஆகியோரையும் தேடிவருகிறோம்.