OOSAI RADIO

Post

Share this post

தினமும் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

முந்திரி கொட்டையில் கிடைக்கும் ஒரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவு வகை முந்திரிப் பருப்பாகும். இது பெரும்பாலான இந்திய இணிப்பு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு இதில் ஏகபோக சத்துகள் நிறைந்திருக்கின்றன.

தினமும் முந்திரி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.

எடையை குறைக்க உதவும்

தினசரி சரியான அளவு இதை சாப்பிடுவதால் எடையை குறைக்க உதவுகிறது. அதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் முன்பு சிறிது முந்திரி சாப்பிடுவது நல்லது.

கேன்சர் அபாயத்தை தடுக்கும்

தொடர்ந்து முந்திரிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது கேன்சர் வருவதற்கான அபாயத்தை கணிசமாக குறைக்கிறது. முந்திரிகளில் Proanthocyanidins எனப்படும் ஒரு வகை ஃபிளாவோனால் இருக்கிறது. இது உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க கூடியது.

சருமத்தை பளபளப்பாக்கும்

முந்திரி பருப்புகளில் செலினியம் அதிகமாக உள்ளது, இது வைட்டமின் ஈ-யுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. தவிர முந்திரியில் உள்ள காப்பர் தாமிரம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை பளபளப்பாகவும் மற்றும் பொலிவாக மாற உதவுகிறது. முந்திரி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் முந்திரி ஆயிலில் நிறைந்து இருக்கும் செலினியம்,ஜிங்க், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சருமம் ஆரோக்கியமாகவும் சுருக்கம் இல்லாமல் இருக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு உதவும்

முந்திரிகளில் நிறைந்திருக்கும்அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் நல்ல கொழுப்புகள் அதிகம் அடங்கி இருப்பதால் குறிப்பிடத்தக்க இதய ஆரோக்கியத்துடன் முந்திரி நுகர்வு இணைக்கப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்க முந்திரி உதவுகிறது. மேலும் இதய செயல்பாட்டை அதிகரிக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

கண் பாதுகாப்புக்கு உதவும்

முந்திரி பருப்புகளில் அதிக அளவு லுடீன் மற்றும் பிற முக்கிய ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவை நம் கண்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. ஆரோக்கியமான கண்பார்வையை உறுதி செய்வதால் வயதானவர்கள் தினசரி தேவையான அளவு முந்திரிகள் சாப்பிடுவதன் மூலம் குருட்டுத்தன்மை ஏற்படும் அபாயத்தை குறைத்து கொள்ளலாம் மேலும் கண்புரை வராமல் தடுத்து கொள்ளலாம். மேலும் முந்திரியில் காணப்படும் Zeaxanthin என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களில் உள்ள மாக்குலாவை பாதிப்பிலிருந்து பாதுகாக்க அவசியமான ஒன்று.

Leave a comment

Type and hit enter