Share this post

பிரான்ஸில் வேலை வாய்ப்பு!

பிரான்ஸில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 520,000 பேர் தங்கள் வேலையை இராஜினாமா செய்துள்ளமையினால், புதிதாக வேலை தேடுவோர் அதிக சம்பளத்துடன் அதனை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பணியை இராஜினாமா செய்தவர்களில் 470,000 பேர் நிரந்தர வேலையில் இருந்தவர்கள் ஆகும். 2008 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 510,000 பேர் தங்கள் வேலையை இராஜினாமா செய்துள்ளனர்.
எனினும் இந்த வருடம் அந்த எல்லையை கடந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இருந்ததை விட இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறும் விகிதம் 2.9 வீதம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. பணியாளர் தட்டுப்பாட்டால் நிறுவனங்கள் திணறிக்கொண்டிருக்கும் சூழல், புதிய வேலைகளுக்கு வாய்ப்பை உருவாக்கித் தருவதால், கூடுதலாக பலர் வேலையை இராஜினாமா செய்துள்ளனர்.
அத்துடன், புதிதாக ஒரு இடத்தில் வேலைக்கு சேரும்போது பணியாளர்கள் கூடுதல் ஊதியம் கேட்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையான பணியாளர் தட்டுப்பாடு காணப்படுவதால், புதிதாக வேலைக்கு வருவோரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேலை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தொழில்வழங்குநர் உட்பட்டுள்ளனர்.
கொரோனா காலப்பகுதியில் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இவ்வாறான நடைமுறைகளை வழங்குமாறு கோருவதற்கும் வாய்ப்புகள் உள்ளதெக குறிப்பிடப்படுகின்றது.
பணியிடங்கள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி காரணமாக தொழில் வழங்குநருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள போதும் புதிதாக வேலை தேடுவோருக்கு சாதகமான அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment