கனடாவில் ‘ஏ.ஆர்.ரஹ்மான் வீதி’ திறப்பு!

கனடா நாட்டு தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தெருக்கள் ஆகியவற்றுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பிற நாட்டு பிரபலங்களின் பெயர்களை சூட்டுவது அரிதான ஒன்று.
இந்த நிலையில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவுக்கு சூட்டியிருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த மேயர் ஒருவர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் உள்ள மார்கம் என்ற நகரில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டியுள்ளதாக அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் ”என் வாழ்க்கையில் இதனை நான் கற்பனை கூட செய்தததில்லை.
இதற்காக மார்கம் மேயர், கனடாவின் இந்திய தூதர் மற்றும் கனடா நாட்டு மக்கள் ஆகியோருக்கு நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.