Post

Share this post

நடிகையிடம் 6 கோடி கேட்டு மிரட்டிய நபர் கைது!

திரைப்பட நடிகை அமலாபாலிடம் ரூ.6 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக அவரது ஆண் நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை அமலாபால். இவருக்கும், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பவ்நிந்தா் சிங் தத் என்பவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு நட்பு ஏற்பட்டது. இருவரும் நண்பா்களாகப் பழகி வந்தனா். பவ்நிந்தா் சிங் தொழில் தொடங்குவதற்காக அமலாபாலிடம் இருந்து ரூ.20 லட்சம் பெற்றாராம். பின்னா், திரைப்படத் தயாரிப்புப் பணிகளுக்காக விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவா்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பவ்நிந்தா் சிங் தனக்கு ரூ.6 கோடி தர வேண்டும் என்று அமலாபாலிடம் கேட்டாராம். பணம் தரவில்லையெனில், இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினாராம். மேலும், பவ்நிந்தா் சிங்கின் உறவினா்கள், நண்பா்களும் மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவில் அமலாபால் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து பவ்நிந்தா் சிங், அவரது உறவினா்கள் உள்பட 12 போ் மீது 16 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பவ்நிந்தா் சிங்கை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Recent Posts

Leave a comment