OOSAI RADIO

Post

Share this post

மூளையின் ஆரோக்கியத்தை குறைக்கும் ஆபத்தான பழக்கங்கள்!

உடலில் மிக முக்கியமான பகுதி தான் நமது மூளையாகும். ஆனால் சில பழக்கவழக்கங்களால் இதன் செயற்பாடு மங்கிப்போகிறது. நமது மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு நமக்கு தேவை முதலில் காலை உணவு தான்.

நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க நாம் உடல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

நாம் நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளால் அது நமது மூளையை பாதிக்கின்றது என கூறப்படுகின்றது. அந்த வகையில் உடலின் மிகவும் முக்கிய உறுப்பான மூளையை பாதிக்கும் பழக்கங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மூளையை பாதிக்கும் பழக்கங்கள்

இன்றைய அவசர கால கட்டத்தில் மனிதர்கள் செய்யும் வேலையில் பல மாற்றங்கள் காணப்படுகிறது. இதன் காரணம் மூளையின் சுறுசுறுப்பின்மைதான். இதற்கு பல காரணங்கள் உண்டு.

நாம் அன்றாடம் எமது தேவைக்காக செய்யும் வேலை கூட எமது மூளையை பாதிக்கிறது. இது காலப்போக்கில் மூளையின் செயல்திறனை காலி செய்து மந்தமாக்கி விடும். தினமும் அதிக சத்தத்தில் தொடர்ந்து இசையை கேட்பது, மிகுந்த இரைச்சல் மிகுந்த சூழ்நிலையில் இருப்பது மூளையின் ஆரோக்கியத்தை இல்லாமல் செய்கிறது.

இதனால் கவனச் சிதறல் ஏற்படுவதோடு, காது கேட்காமல் போகும் நிலையும் ஏற்படலாம். இப்படி அதிக சத்தம் கேட்பதால் அதிக இரைச்சல் மன அழுத்தத்தை உண்டு பண்ணும் கார்டிசால் ஹார்மோனை அதிகரித்து மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தினம் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக அளவில் இனிப்புகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள ஐஸ்கிரீம் கேக் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால், ஞாபக சக்தி பெரிதும் பாதிக்கும்.

அளவிற்கு அதிக சர்க்கரை மூளை செல்களை பாதித்து, வீக்கத்தை ஏற்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் கொடுப்பதால், மூளையின் செயல்திறன் இது பாதிக்கிறது. காலை சூரிய ஒளி மிகவும் முக்கியமாகும்.

இந்த நிலையில் சூரிய ஒளி உடலில் படுவதால் உடலில் சரட்டோனின் ஹார்மோன் அளவு அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கும். இதற்கு நேர் மாறாக சூரிய ஒளி உடலுக்கு கிடைக்காத போது மன அழுத்தம் ஏற்பட்டு மூளையின் செயல்திறன் பாதிக்கும்.

அதோடு வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக சிதறல் அதிகமாகும். எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது மூளை ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி அவசியமாகும். அந்த வகையில் வைட்டமின் டி உணவுகளை உண்ண மறுத்தலால் அது மூளையை பாதிக்கிறது. உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.

உடல் உழைப்பு இல்லாத நிலை மூளையை மழுங்கடிக்க செய்து விடும். சோம்பேறித்தனம், காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மூளையின் செயல்திறன் பாதிக்கும்.உடலில் நீர்ச்சத்து குறைவதால், கவனம் செலுத்தும் திறன் பெரிதும் பாதிக்கப்படும்.

மூளை செல்கள் திறம்பட வேலை செய்ய, உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும். நீர்ச்சத்து குறைவதால் தலைவலி, கவன சிதறல், மனநிலை மாற்றம் ஆகியவை ஏற்படலாம்.

தினமும் நீர்ச்சத்து நிறைந்த உணவை எடத்துக்கொள்ளுதல் மூளையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த விடயங்கள் ஆராய்ச்சியின் கீழ் தெரியவந்துள்ளது.

Leave a comment

Type and hit enter