Post

Share this post

நிகழ்ச்சி தொகுப்பாளராகும் நடிகர் ஜீவா! (வீடியோ)

நடிகர் ஜீவா நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிழக்ச்சியைத் தொகுத்துவழங்க ஆரம்பித்த பிறகு பிரபல நடிகர்கள் தொகுப்பாளர்களாக களமிறங்கிவருகின்றனர். முன்னதாக சூர்யா, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கியிருக்கிறார்கள்.
மேலும் விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்டோரும் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கியிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜீவாவும் இடம் பிடித்துள்ளார். நடிகர் ஜீவா ஆஹா ஓடிடித் தளத்தில் சர்கார் வித் ஜீவா என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இந்தப் ப்ரமோ விடியோவைப் பகிர்ந்துள்ள ஜீவா, கச்சேரி கலகட்டப்போகுது, மச்சி ஒரு மைக் சொல்லேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஜீவா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காஃபி வித் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, சம்யுக்தா, அம்ரிதா, திவ்யதர்ஷினி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Leave a comment