பொதுத்தேர்தலில் 84 அரசியல் கட்சிகள் போட்டி
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் சுமார் 84 அரசியல் கட்சிகள் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஏனைய தரப்புகளுடன் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்படி பொலிஸ் திணைக்களம், அரச அச்சகம், தபால் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய தேர்தலுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட 84 அரசியல் கட்சிகள் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் சுயாதீன அபேட்சகர்களும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவார்கள் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.