Post

Share this post

ஜெயிலர் படத்தில் இணையும் பிரபலம்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும், இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment