Post

Share this post

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு

வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ணம் லீக் போட்டியில் வங்கதேச அணி இலங்கையிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது 35 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 102 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 1500 ஓட்டங்களை எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 115. சராசரி 19.5.
“சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். வாய்ப்பு வரும்போது கிளப்தொடர்களில் விளையாட நான் தயாராக இருப்பேன். டெஸ்ட் மட்டும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக” தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Recent Posts

Leave a comment