டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாகவும், டொலர் ஒன்றின் கொள்விலை 290.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த 2023 ஜூன் 8 ஆம் திகதி இறுதியாக டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 300 ரூபாவுக்கும் குறைவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.