OOSAI RADIO

Post

Share this post

பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் இறுதி தீர்மானம்!

நாட்டிலுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தீர்மானத்தை கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய நியமனக்குழு கூடி, எடுக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter