ஓய்வூதியங்களை ரத்து செய்து வர்த்தமானி வெளியீடு!
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியப் பலன்களை செப்டம்பர் 11, 2024 முதல் இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் 11.09.2024 இலிருந்து நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, 11.09.2024 க்கு பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.