Post

Share this post

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது!

‘நாட்டில் பணவீக்கம் சமாளிக்கும் அளவில்தான் உள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் வளா்ச்சிப் பணிகளுக்கும் தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியா ஐடியாஸ் மாநாட்டில் அவா் பேசியதாவது:
இந்தியா வளா்ச்சிப் பாதையில் பயணிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், வருவாய் பகிா்வில் சமநிலை, வளா்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயா்வு என்பது இப்போது பெரிய பிரச்னையாக இல்லை. கடந்த சில மாதங்களில் விலைவாசியை சமாளிக்கும் அளவுக்குள் கொண்டு வந்துவிட்டோம்.
ஜூலை மாதத்தில் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்துவிட்டது. வட்டி விகிதத்தை பொறுத்தவரையில் இந்திய ரிசா்வ் வங்கி சரியான முடிவுகளை எடுக்கும். அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை வேகமாக உயா்த்தி வருவது கவனிக்கத்தக்கதாகும்.
ரஷ்யா – உக்ரைன் போரால் சா்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள்களின் வரத்து தொடா்ந்து சுமுகமாக இருக்குமா என்பது தொடா்பாகவும் நிச்சயமற்ற சூழல் உள்ளது. நிதித் துறை உள்பட அனைத்து நிலைகளிலும் அமெரிக்காவுடனான உறவை இந்தியா வலுப்படுத்தியுள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

Leave a comment