புற்றுநோயில் இருந்து மீள சார்லஸ் உட்கொள்ளும் உணவு!

மன்னர் சார்லஸ் வழக்கமாக மதிய உணவு உட்கொள்வதில்லை என்றும், தற்போது புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் மதிய உணவு உண்ணத் துவங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மதிய உணவுக்காக மன்னர் சார்லஸ் தேர்ந்தெடுத்துள்ள உணவு அவகேடோ பழம்.
ஏன் அவகேடோ பழம்?
விடயம் என்னவென்றால், அவகேடோ பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதயத்துக்கு நன்மை பயக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முதலான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அது சூப்பர் உணவு என அழைக்கப்படுகிறது.
அத்துடன், அவகேடோ பழங்கள் நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதிலும், ஏன் புற்றுநோயை தடுப்பதிலும், எதிர்த்துப் போராடுவதிலும் உதவியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அகவேடோ பழம் அல்லது அதன் பழக்கூழுக்கு, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குணம் இருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
காரணம், அதில் பீட்டா கரோட்டின், லியூட்டின், சியாக்சாந்தின் போன்ற பல ஆன்டி ஆக்சிடன்ட்களும், வைட்டமின் Eயும் உள்ளது. அவை புரோஸ்ட்ரேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதுடன் வாய் புற்றுநோய் செல்களை கொல்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.