விளையாட்டு உலகுக்கு விடை கொடுத்த பிரபலம்!
டேவிஸ் கோப்பையுடன் ஓய்வு பெறுதாக எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை ரஃபேல் நடால் வெளியிட்டுள்ளார் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரஃபேல் நடால். இது மிகவும் கடினமான முடிவு என்றும் இது குறித்து தீவிரமாக யோசித்த பிறகு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் வாழ்க்கையில் கடைசி இரண்டு ஆண்டுகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் நடால் கூறியுள்ளார். நடால் இந்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற செய்தி ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை அவர் உறுதி செய்துள்ளார்.
களிமண் ஆடுகளத்தின் கதாநாயகன் என்று பெயர் பெற்றவர் நடால். கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக பெரும் அவதி அடைந்து வந்த நடால் இறுதியாக ஓய்வை அறிவித்தார். 14 பிரஞ்ச் ஓபன் பட்டங்கள், 36மாஸ்டர்ஸ் பட்டங்கள், ஒரு ஒலிம்பிக் தங்கம் உட்பட 92 ஏடிபி ஒற்றையர் பட்டங்களை நடால் பெற்றுள்ளார். ரஃபேல் நடாலின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.