முட்டை விலை குறித்து எழுந்துள்ள சர்ச்சை!
முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 48 ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைய நிலவரத்தால் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி குறைவினால் முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகப்படியான உற்பத்தி விற்கப்பட்டதால், தினசரி முட்டை உற்பத்தி நுகர்வுக்கு போதுமானதாக இல்லை என்றும் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.