பிக் பாஸில் மீண்டும் கல்ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன் உள்ளே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதுவரை 7 சீசன்கள் முடிந்த நிலையில், அனைத்தையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில் எட்டாவது சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
ஆனால் விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசனை மிஞ்சும் அளவிற்கு தற்போது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸிற்குள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதால், இதனை பட புரமோஷன்கள் அடிக்கடி இந்நிகழ்ச்சியில் நடந்து வருகின்றது.
அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வருகின்றனர்.
அமரன் படத்தின் டிஜிட்டல் உரிமையை விஜய் டிவி வாங்கி உள்ளதால், நிச்சயம் அப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதாகவும், இதனால் கமல்ஹாசனும் பிக் பாஸிற்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமரன் திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படம் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.