தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது.
100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும் என்றும் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என்ற அடிப்படையில் ரூ.55 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு ரூ.72.50 ஆம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.155), 400 யூனிட்கள் வரை மாதத்துக்கு ரூ.147.50 ம் (இரண்டு மாதங்களுக்கு ரூ.295) உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு ரூ.297.50 (2 மாதங்களுக்கு ரூ.595) கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், மின் கட்டண உயர்வு குறித்து சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மின் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.