மகாராணி எழுதிய கடிதம் – தொடரும் இரகசியம்!

மகாராணி எலிசபெத் எழுதிய கடிதமொன்று இன்னும் திறக்கப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் திகதி தனது 96 ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் புதிய மன்னராக 73 வயது நிரம்பிய மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுள்ளார்.
அத்துடன் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
ராணி எலிசபெத்தின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் உள்ள நிலையில் இன்று எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு கொண்டுவரப்படும்.
நாளை மறுநாள் லண்டன் கொண்டுவரப்படுவதுடன் அங்கு ராணியின் உடல் சில நாட்கள் இருக்கும். வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு எதிரே நடைபெறும் என தெரியவருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் நிலையில் அவரால் எழுதப்பட்ட கடிதமொன்று குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.