Post

Share this post

டி20 உலகக் கிண்ணம் – இரு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

டி20 உலகக் கிண்ண போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இரு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கிண்ண போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.
நவம்பர் 9, 10 திகதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
டி20 உலகக் கிண்ண போட்டியின் பிரதான சுற்றுக்கு அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா, ஹர்ஷல் படேல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
ரோஹித் சர்மா (தலைவர்), கே.எல். ராகுல் (உப தலைவர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் காப்பாளர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), பாண்டியா, ஆர். அஸ்வின், சஹால், அக்‌ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

Recent Posts

Leave a comment