வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக 10 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சந்தையில் தற்போது போதியளவு வெங்காயம் கையிருப்பில் இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.