Post

Share this post

அநியாயமாக ஏமாந்த பிக்பாஸ் ஜுலி!

கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்தே தமிழ் சின்னத்திரையில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துவிட்டது, அக்டோபர் மாத இறுதியில் 6வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
5வது சீசன் முடிவடைந்து இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது, இதிலும் நாம் பார்த்து பழகியவர்கள் தான் வந்தார்கள்.
பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மக்களிக் வெறுப்பை சம்பாதித்த ஜுலி அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார்.
அண்மையில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜுலி ஒரு சோகமான விஷயத்தை கூறியுள்ளார். அவர் லண்டனில் நர்ஸ் வேலைக்காக மும்பை ஏஜென்சியிடம் ரூ. 3 லட்சம் பணம் கட்டி இருந்தேன்.
கஷ்டப்பட்டு சேர்த்த அந்த பணத்தை நிறுவனத்திடம் கட்டிவிட்டு லண்டன் செல்வதற்காக செய்த வேலையையும் விட்டுவிட்டு ஏற்பாடுகள் செய்து வந்தேன். அப்போது நான் பணம் கட்டிய மும்பை ஏஜென்சி நிறுவனம் என்னை ஏமாற்றிவிட்டதாக தகவல் வந்தது.
எனக்கு ஒன்றும் புதியவில்லை, அப்போது எனது குடும்பம் தான் ஆறுதலாக இருந்தார்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Leave a comment